பெற்றோல், டீசல் விலைகளை அதிகரிக்கும் IOC ?
Tuesday, August 30th, 2016
டீசலுக்கான தீர்வை வரி அதிகரித்தமையினால் டீசல் மற்றும் பெற்றோல் இனது விலைகளை அதிகரிக்க லங்கா இந்தியன் ஒயில் சங்கமானது (IOC) தெரிவித்துள்ளது.
குறித்த வரியானது வியாபாரிகள் மத்தியில் அதிகம் தாக்கம் பிடித்துள்ளதாக ஐஓசி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் ஷியாம் போரா தெரிவித்துள்ளார்.
பெற்றோல் இற்கான வரி அதிகரிக்கப்படாவிடினும் டீசல் இற்கான தீர்வை வரி அதிகரிப்பானது இரண்டிற்கும் பொதுவானதாகும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்த கருத்தினை தாம் ஏலவே அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் லங்கா இந்தியன் ஒயில் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
வலிகாமத்தில் புகையிலை அறுவடை மும்முரம்
அரசுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை.!
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு - அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ...
|
|
|


