பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!
Wednesday, July 7th, 2021
இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு விடவோ அல்லது தனியார் மயமாக்கவோ எந்தவித திட்டங்களும் இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு விடவோ அல்லது தனியார் மயமாக்கவோ திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து இன்று (07) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போதே அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீன நிறுவனத்திற்கு அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு தயாரில்லை எனவும் அவர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
00
Related posts:
மத்தியஸ்தர் சபையில் உள்ளோருக்கு வெளிநாடுகளில் பயிற்சி !
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு!
எரிவாயு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - அகில இலங்கை சிற்றுண்டிச்ச...
|
|
|


