பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் காவல் பிரிவினரால் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே குறித்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்றுள்ள பூஜித ஜயசுந்தர நல்லூரில் விசேட பூஜை வழிபாடுகளிலு...
முல்லைத்தீவில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதி!
அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையம்!
|
|