பெறுமதி சேர் வரிக்கு எதிராக எதிர்ப்பு பதாகைகள்!

Monday, July 18th, 2016

அரசாங்கத்தினால் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வற் வரி திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கடைகளில் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

சுமார் 2500 எதிர்ப்பு பதாகைகள் கடைகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக களனிவெலி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கங்கானாத் ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

வெலிகடை, ராஜகிரிய, மாலம்பே, அதுருகிரிய, கொடகம, ஹோமாகம, கொட்டாவ, மஹல்வராவ, ஹோகந்தர மற்றும் விதயால சந்தி ஆகிய இடங்களில் காணப்படும் வர்த்தக நிலையங்களின் அனைத்து கடைகளிலும் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாளையும் நாளை மறுதினமும் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.அரசாங்கம் வற் வரி திருத்தச் சட்டத்தை நீக்காவிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: