நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்கரமசிங்க!

Wednesday, June 23rd, 2021

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு ஆசனத்தையும் வென்றிருக்கவில்லை.

எனினும், பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் கிடைத்திருந்தது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் அமையப் பெற்று, சுமார் 10 மாதங்கள் கழிந்த நிலையில், குறித்த தேசியப் பட்டியலுக்காக ரணில் விக்ரமசிங்கவை அக்கட்சியின் செயற்குழு பெயரிட்டிருந்தது.

சுமார் 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துவந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 2020 ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவி தேசியப்பட்டில் ஊடாக இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அரசாங்கத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று (22) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட 200 பில்லியன் ருபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதமும் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: