ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இந்த புத்தாண்டு மலரட்டும் – புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, April 14th, 2023

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தமிழ்,சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும்.

சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர். கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம்.

புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது.ஆனால் இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது.

அடுத்த புத்தாண்டில், இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும்.

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts:

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் - தேயிலை சபை தெரிவிப்பு!
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் - அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ...

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் தீவிர ...
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - ஜனாதிபதி கோட...
"செனல் 4" விவகாரம் - நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளையதினம் நாடாளுமன்ற...