பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
Monday, February 13th, 2017
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 20 பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 410 மில்லியன் ரூபா நிதியை சுகாதார அமைச்சு ஒதுக்கியுள்ளது.
இதேவேளை, உட்கட்டமைப்பு வேலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநோயாளர் பிரிவு 3 சிகிச்சை வழங்கும் பிரிவுகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகள் ஆகியன பெற்றுத் தரப்படும் என்றும், டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts:
இறப்பர் உற்பத்தி வீழ்ச்சி!
அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் - சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்ப...
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை - யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பி...
|
|
|


