பெண் வலுவூட்டல் பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தேசிய மகளிர் குழுவும் பேராதனைப் பல்கலைக் கழக விவசாய விஞ்ஞான பீட விவசாய விரிவாக்கல் திணைக்களமும் இணைந்து அரசியலில் பெண்களை வலுவூட்டல் என்னும் சான்றிதழ் பயிற்சி நெறியை நடத்தவுள்ளது.
இந்த சான்றிதழ் பயிற்சி ஆறு மாதங்கள் பகுதி நேரமாக நடத்தப்படவுள்ளது. பயிற்சியின் போது பெண்களின் தலைமைத்துவ ஆளுமையை விருத்தி செய்து பெண்களை அரசியலில் உட்பிரவேசிக்க செய்ய தேவையான அறிவு மற்றும் திறன்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபாடு அல்லது அரசியல் செயற்பாடுகளில் குறைந்த பட்சம் மூன்று வருடம் அனுபவம் என்பவற்றை கொண்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்களை எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு முன்பாக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், கல்வித்தகைமை, சமூக செயற்பாடுகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை உள்ளடக்கும் முகமான சுயவிபரக் கோவையுடன் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களின் பிரதிகளையும் இணைத்து இணைப்பாளர், பால்நிலைப் பிரிவு, விவசாய விரிவாக்கல் திணைக்களம், விவசாய விஞ்ஞான பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
|
|