பெண்களை கட்டி வைத்து நகைகள் கொள்ளை!
Friday, July 13th, 2018
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராயில் உள்ள வீடொன்றில் மூன்று பெண்களைக் கட்டிவைத்து அவர்களிடம் இருந்த அறு பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் இறங்கிய திருடர்கள் பெண்களைத் தாக்கி அவர்களைக் கட்டி வைத்துள்ளனர். பெண்கள் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த நகைகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொள்ளை தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கமாக்க நேரிடும் - சுகாதார அமை...
அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் - முடியாவிட்டால் விலகி செல்வேன் - பிரதமர் ...
|
|
|


