பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நடவடிக்கைகள் டிசெம்பர் 10 வரை !

Sunday, November 26th, 2017

யாழ்.சமூக செயற்பாட்டு மையம் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்புத் தொடர்பில் 16 நாள்கள் செயற்பாட்டை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 வரையான காலப்பகுதியில் பல்வேறுபட்ட சமூக மட்டங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்நிகழ்வு தொடர்பாக யாழ்.சமூக செயற்பாட்டு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு;

எமது நிறுவனமான யாழ்.சமூக செயற்பாட்டு மையம் கடந்த 10 வருடங்களிற்கு மேலாக பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு நலன் சார்ந்த செயற்பாடுகளை வடமாகாண ரீதியாக முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் கடந்த பல வருடங்களாக பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு 16 நாள்கள் செயற்பாட்டினை நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரையான காலப்பகுதியில் பல்வேறுபட்ட சமூக மட்டங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இந்த வருடமும் இச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இச் செயற்பாட்டினூடாக எமது சமூகத்தில் நடைபெறும் வன் முறைச் செயற்பாடுகளை குறைத்து நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் வேண்டும் என்ற நோக்கத்தினூடாகவே முன்னெடுத்து வருகின்றோம்.

இவ்வருடம் பெண்களிற்கான பாதுகாப்பான சூழலைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதனைப் போக்குவரத்துப் பிரிவு, சமூகமட்ட அமைப்புகள், இளைஞர் கழகங்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், தனியார் கல்வி நிறவனங்கள் ஆகிய பங்கு பற்றுநர்களுக்கு இச் செயற்பாடு சம்பந்தமாக கலந்துரையாடல்கள் மூலமாகவும் களப்பயிற்சிகளுக்கு ஊடாகவும் செயற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். எனவே ஆர்வமுள்ள சமூக ஆர்வலர்கள், தொண்டர்கள் ஆகியோரை இணைந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் (caravan) தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரியவினால் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு விழிப்புணர்வு வாகனம் டிசம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைகின்றது. எமது நிறுவனமானது CBV forum த்தின் வடமாகாணத்திற்கான பங்காளர் என்ற ரீதியில் குடாநாட்டில் பல்வேறுபட்ட இடங்களிற்கு இது சென்றடையவுள்ளது என்று கூறப்படுகின்றது

Related posts: