புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை கைவிட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!
Friday, May 31st, 2024
இலங்கையில் நல்லிணக்கத்திற்கான சாதகமான சூழலை உருவாக்க புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்நிலையில், காசாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் மேற்குலக நாடுகள் தமது இரட்டை நிலைப்பாட்டை காட்டி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக. ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச சட்டங்களில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
எனினும், இஸ்ரேல் – பலஸ்தீன யுத்தம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று 1965 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எல்லைக்கு அமைவாக இரண்டு நாடுகளும் செயற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


