புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளி குறைவடைந்ததால் பிள்ளையை கட்டி வைத்து அடித்த தந்தை!

Friday, October 7th, 2016

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளியால் சித்தியடையத் தவறிய மாணவனை அவரது தந்நை கடுமையாகத் தாக்கினார் எனக் கரைதுறைப்பற்று பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் நடந்துள்ளது. நடப்பு ஆண்டுக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றிய குறித்த மாணவன் 149 புள்ளிகள் பெற்றுள்ளார்.

ஒரு புள்ளியால் அவர் சித்தியடையவில்லை. மாணவனின் தந்தை இரவு 9.30 மணியளவில் மாணவனின் கைகளை மரத்துடன் கட்டிவைத்து தடியால் பலமாக அடித்துள்ளார். மாணவனின் உடலில் பல இடங்களில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. தழும்புகளுடன் மாணவன் பாடசாலை சென்றுள்ளான். இந்த சம்பவத்தை அறிந்த நலன்விரும்பி ஒருவர் கரைதுறைப்பற்று பிரதேச செயலக நன்னடத்தை உத்தியோகத்தருக்கும், தேசிய சிறுவர் சபை அதிகார சபைக்கும் அறிவித்தார். சிறுவர் தாக்கப்பட்டமை தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exam1_mini-720x480

Related posts: