புனர்வாழ்வு பெற்ற பத்துப்பேர் விடுதலை!

புனர்வாழ்வு பெற்ற 10 முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கர்னல்.எம்.ஏ.ஆர்.எம்டோன் தலைமையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் உறுப்பினர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வு பெற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
Related posts:
நீருக்கான கட்டண உயர்வு இடைநிறுத்ப்பட்டது!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !
வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என பலர் வேடிக்கை பார்க்கின்றனர் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|