புதையல் தோண்டியவர்கள் கைது.!

திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குச்சவெளி காஸிம் நகர் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். குச்சவெளி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சுவிஸிலிருந்து நிதி - செல்வபுரத்தில் வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் 6 பேர் கைது!
மாசி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - 7 இலட்சத்து 47 ஆயிரத்து ...
VAT வரி அதிகரிப்பு - ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன - பேக்கரி உ...
|
|