புதிய அரசியலமைப்பு : ஆளுநரின் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு – ஜீ.எல் பீரிஸ்!

Tuesday, April 4th, 2017

கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஆளுனரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பில் ஒற்றையாட்சிக் கொள்கையை உறுதிப்படுத்திவிட்டு, உட்பிரிவுகளில் அதற்கு முரணான வகையிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளது. ஆளுநரின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆளுனர் முதலமைச்சருக்கு பொறுப்புக் கூறும் நிலை ஏற்படும் என்றும் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். ஆளுனர் அரசாங்கத்தின் நேரடி பிரதிநிதியாக இல்லாமல் மாகாணங்களின் பிரதிநிதிகளாக மாற்றப்படுவார்.

Related posts: