புகையிரத விபத்தில் ஒருவர் பலி!
Saturday, October 1st, 2016
கிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts:
எதிர்வரும் வாரம்முதல் விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் – தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தவேண்டிய அவ...
பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை - தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில்...
வெளியேறுகின்றார் ஜூலி சங் - இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியம...
|
|
|


