எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022

எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை. எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும்.

நவம்பர் மாத நடுப்பகுதியின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் - தொல்பொருள் திணைக்களம்...
எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் - போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்ந...
"போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை.- தனித்தனியே ந...