புகையிரத திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்!
புகையிரத வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க மற்றும் நீர் கொழும்பு இடையிலான புகையித போக்குவரத்து தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத வீதியை இரட்டை வீதியாக மாற்றுவதற்கு, குறித்த புகையிரத போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 9.45 தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அதிகாலை 5 மணி வரை புகையிரத போக்குரவத்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை தொடக்கம் சீதுவ வரை, சிலாபம் தொடக்கம் நீர் கொழும்பு வரை புரைகயிரத போக்குவரத்து இடம்பெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது
Related posts:
அதிபர்கள், ஆசிரியர்களின் சேவைக்கால சம்பள நிலுவைகளை சீர்செய்யாவிட்டால் கல்வி அதிகாரிகளை புறக்கணிக்கத்...
பொருளாதார நெருக்கடியை மீளக்கட்டியெழுப்ப நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் – கலந்துரையாடல்!
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைச...
|
|
|


