புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி!
Friday, September 1st, 2017
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்றுஅதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிரபல தமிழ்மொழி பாட ஆசிரியை மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையருக்கு பாதிப்பு இல்லை!
அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்க...
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறி - விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் சுட்டிக்காட்டு!
|
|
|


