புகையிரதத்தில் மோதி 4 யானைகள் பலி!

செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரத வீதியில் கூட்டமாக நின்ற யானைகளின் மீது மோதியதில் 04 யானைகள் உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த 04 யானைகளில் ஒன்று குட்டியாகும்.சம்பவ இடத்திற்கு இன்று புதன்கிழமை காலை வந்த செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் உயிரிழந்த யானைகளை மீட்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் ஆறு பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞைகள் பொருத்த நடவடிக்கை!
பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில...
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எதுவித இறுதி தீர்மானமும் எடுக்கப்படவில்லை !
|
|