பாவனைக்குதவாத பழங்கள்: 12 வியாபாரிகளுக்கு அபராதம்!

Friday, July 22nd, 2016

மருதனார்மடம் சந்தையில் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் பழங்கள் விற்பனை செய்த 12 வியாபாரிகளுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன், புதன்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

இணுவில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், அழுகிய மாம்பழங்கள், தரமில்லாத பழங்கள் மற்றும் மருந்து தெளித்து பழுக்க வைத்த பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்த 12 வியாபாரிகள் இனங்காணப்பட்டதுடன், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களும் கைப்பற்றப்பட்டன.

இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அழுகிய மாம்பழங்களை விற்பனை செய்த 4 வியாபாரிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் உடல்நலத்துக்கு ஒவ்வாக றம்புட்டான் மற்றும் அப்பிள் பழங்களை விற்பனை செய்த 3 வியாபாரிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் மருந்து தெளித்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த 6 வியாபாரிகளுக்கு தலா 7 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts: