பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைக்கான விண்ணப்பம்!
Tuesday, May 8th, 2018
வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் இயங்கிவரும் கீழைத்தேய கல்வியற்கல்லூரி ( ஆரிய திராவிட பா~hபிருத்திச் சங்கம்) நடத்தும் பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைகள் 2018 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாலபண்டிதர் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகள் இளஞ்சைவப் புலவர், சித்தாந்த பால பண்டிதர் பரீட்சைகளிலோ அல்லது வேறு பட்டதாரிப் பரீட்சைகளிலோ சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளோர் முதலாம் வருட பரீட்சையான பால பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் அவசியம்.
மேற்படி பரீட்சைகள் யூன் மாதத்தில் இல.20, புதிய செம்மணி வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீழைத்தேய கல்வியற்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
பரீட்சைக்குத் தோற்ற விரும்புவோர் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் செயலாளர், கீழைத்தேயக் கல்வியற்கல்லூரி, சிந்துபுரம், வட்டுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலதிக விவரங்களை 0776913333 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
Related posts:
|
|
|


