பாலத்தினை உரிய முறையில் புனரமைக்குமாறு கோரிக்கை!

Thursday, December 15th, 2016

கிளிநொச்சி பொது வைத்தியாலைக்கு அருகாமையாக கனகாம்பிகைக்குளம் செல்லும் வீதி புனரமைக்கப்படாமை மற்றும் அதில் உள்ள பாலம் உரிய முறையில் அமைக்கப்படாமை போன்றவற்றால் இவ் வீதியை பயன்படுத்துவோர் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

300இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் போக்குவரத்து வீதியாக காணப்படும் குறித்த வீதி போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது. இதேவேளை குறித்த வீதியை குறுக்கறுத்து செல்லும் ஆற்றுக்கான பாலம் உரிய முiறில் அமைக்கப்படவில்லை. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் கிராம மட்ட அமைப்பினால் அமைக்கப்பட்ட குறித்த பாலம் ஆற்றினது நீர் கொள்ளளவை தாங்கக்கூடிய வகையில் இல்லை.

இதனால் பாளத்தின் இரு பகுதிகளம் அரிப்புக்குளாகி பாலம் உடைந்த விழும் நிலையில் காணப்படுகின்றது. மேலும் பாலத்தின் அருகில் ஒரு ஆபத்தான குழியும் ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியையும் பாலத்தினையும் பாடநாலை மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பன்படுத்தி வருகின்றனர். எனவே குறித்த வீதியை புனரமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG_4395

Related posts: