பாரிய நிலவெடிப்பு :191 பேர் இடம் பெயர்வு.!
Friday, May 20th, 2016
கலஹா, டுனாலி, மல்பேரி பிரிவு கிராமத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாரிய நில வெடிப்பின் காரணமாக 48 குடும்பங்களை சேர்ந்த 191 பேர் இடம் பெயர்ந்து டுனாலி தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் பல இடங்களில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகளும் வெடித்துள்ளன. நீர் ஓட்டம் மற்றும் கசிவு அதிகமாக காணப்படுகின்றது. இதனால் இவர்களை குறித்த இடங்களில் இருந்து வெளியேறுமாரு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
தற்போது, இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான வசதிகளை கிராம சேவகரின் உதவியுடன் பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது
Related posts:
தீவுப்பகுதி பயணங்களுக்கு பாதுகாப்பான படகு சேவைகள்!
எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு...
வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீ...
|
|
|


