பாதுகாப்பு செயலாளர் – ஆஸி வெளிவிவகார செயலாளர் சந்திப்பு!
Tuesday, September 5th, 2017
அவுஸ்ரேலிய வெளிவிவகார செயலாளர் பிரான்செஸ் அடம்சன் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் குழுவினர்களுக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அவுஸ்ரேலிய தூதுக்குழுவினரில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் திரு. ப்ரைசீ ஹட்சன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஜாசன் செர்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளும் , மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஆர் எம் எஸ் சரத் குமார, தேசிய புலனாய்வு அதிகாரி. திரு சிசிர மென்டிஸ், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் டீ ஏ ஆர் ரணவக மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான பிரதம பணிப்பாளர் ரியர் எட்மிரல் பியால் டீ சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்
Related posts:
|
|
|


