பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்ருடன் பாக். கடற்படை அதிகாரிகள் சந்திப்பு!

கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘பீஎன்எஸ் நஸ்ர்’ கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பார்வையிட்டார்.
கப்பலை நேற்று முன்தினம் பார்வையிட சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அக்கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் ஸாகிப் இல்யாஸ் வரவேற்றார்.
இக்கப்பலை சுற்றிப் பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் கட்டளைத்தளபதி கொமடோர் சகா ரெஹ்மான்; அமைச்சருக்கு நினைவுச்சின்னம் வழங்கினார்.
Related posts:
பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் - பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய...
பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை - நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுச...
|
|