பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் போராட்டம்!
 Friday, March 10th, 2017
        
                    Friday, March 10th, 2017
            
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு என்பவற்றை வலியுருத்தி இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பற்ற புகையிரத காப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்த போதும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று முதல் ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
மேலும் இந்த போராட்டத்தின் போது, புகையிரத கடவையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தாம் பொறுப்பல்ல என்றும் மக்களை பாதுகாப்பான முறையில் கடவைகளைக் கடக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        