பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது!

Thursday, May 24th, 2018

பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் பாக்கு விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து நேற்று; (23) மாலை அதே இடத்தினைச் சேர்ந்த இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப் பாக்கு விற்பனை செய்வதாக பல தரப்பினராலும், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் 30 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம், தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அவ்வாறு நடாத்தப்பட்ட தேடுதலின் போது, நேற்று மாலை, பெருமாள் கோவில் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த நபர்களிடமிருந்து 500 கிராம் மாவா என்று அழைக்கப்படும், போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

31 மற்றும் 29 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts:


யாழ். புத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் ஐந்து  நாட்களி...
ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் - பொது போக்குவரத்து ...
நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை - மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவ...