பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Wednesday, July 7th, 2021

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: