பாடசாலை சீருடை வவுச்சரில் மோசடி!

Tuesday, December 20th, 2016

பாடசாலை சீருடையை கொள்வனவு செய்வதற்காக போலியான வவுச்சர்கள், பத்தேகம பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு கிடைத்துள்ளது.

குறித்த கடை உரிமையாளர் அந்த வவுசரை வங்கியில் வைப்பிலிட முயற்சித்த போது வங்கியால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.  குறித்த வர்த்தகரால் வங்கிக்கு வழங்கப்பட்ட 04 வவுச்சர்களின் இரகசிய இலக்கங்கள் தவறானது என்று வங்கியால் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வவுச்சரில் பாடசாலையின் இறப்பர் முத்திரையை பதிவதற்கு பதிலாக பேனாவால் பாடசாலையின் பெயர் எழுதப்பட்டிருந்துள்ளது.

மத்துகம, கட்டுகஹஹேன கணிஷ்ட வித்தியலாயத்தின் பெயருடைய வவுச்சர் மூன்றும், பத்தேகம, விலகொட கணிஷ்ட வித்தியாலயத்தின் பெயருடைய வவுச்சர் ஒன்றும் இவ்வாறு கிடைத்துள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

1579406591School

Related posts: