பாடசாலைகளில் பொங்கல் கொண்டாட்டம் மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு!
Saturday, January 7th, 2017
வடக்கிலுள்ள சகல பாடசாலைகளிலும் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனால் சகல கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8ஆம திகதி தொடக்கம் ஜனவரி 1ஆம் திகதி வரையான நாள்கள் தேசிய ஒருங்கிணை;பு மற்றும் நல்லிணக்க வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத் தலைமைச் செயலர் அறிவித்தார். வலயக் கல்வி அலுவலகங்களினால் வலய மட்டத்தில் தைப்பொங்கல் விழாவை மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றொர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அனுப்பிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
ரிஷாத் வீட்டில் மண்ணெண்ணெய் - மர்மம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!
பாரதியஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் விஜயம் – பல்வேறு கலந்துரையாடல்களிலும் பங்...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை - பொதுப் பயன்பா...
|
|
|


