பல இலட்சம் பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் ஒருவர் கைது !

கிளிநொச்சி பளைப் பிரதேசத்தில் வைத்து சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் ஒருவரை பளைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். நேற்று காலை எட்டு மணியளவில் பளைப் பொலிசாருக்கு கிடைத்த இரசியத்தகவலை அடுத்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாரஊர்தி ஒன்றில் எருவினைக் கொண்டுசெல்வதனைப்போல் கடத்தப்பட்ட சுமார்பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான 39 முத்திரைக் குற்றிகளுடன் வாகனச் சாரதியினையும் இத்தாவில் பகுதியில் வைத்துக் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளைப் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இன்று குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்த இருப்பதாக வும் செய்திக்ள் தெரிவிக்கின்றன.
Related posts:
திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய பரிந்துரைகள் -சுகாதார அமைச்சு!
அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!
பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் பூர்த்தி - கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு...
|
|