உணவுவிழா இஸ்லாமபாத்தில் ஆரம்பம்!
Friday, February 2nd, 2018
இலங்கை உணவுவிழா நாளை 3ஆம் திகதி பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தில் ஆரம்பமாகின்றது .
பாகிஸ்தானில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாகஇஸ்லாமபாத் மறியெற் ஹோட்டலில்[Marriott Hotel ] நடைபெறவுள்ளது.
இவ் விழாவின் பிரதான நோக்கம் இலங்கையின் கலாச்சார உணவுவகைகளை பிரபல்யப்படுத்துவதேயாகும்.
இஸ்லாமபாத்திலுள்ள மறியெற் ஹோட்டல் தலைமை சமையலாளர்களுடன் இணைந்து இலங்கையின் தலைமை சமையலாளர் செய்க் டாவூட் முகமட் சப்றாஸ் உணவுத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பு விமான போக்குவரத்து விஸ்தரிப்பு!
யாழ் மாவட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு விவசாய அமைச்சின் 7 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் திராட்சை செய...
வடக்கு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் பூரண ஆதரவு வழங்கப்படும் ...
|
|
|


