பலியானவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!
Monday, April 17th, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 14ம் திகதி புதுவருட நாளன்று இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வீடுகளுக்கிடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த நான்கு நாட்களில் 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
அழுத்தங்கள் வந்தாலும் அபிவிருத்தி நிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் சாகல ரத்நாயக்க!
சுகாதாரச் சீர்கேட்டு: உணவக உரிமையாளருக்கு 5,000 அபராதம்!
|
|
|


