பருவகால மாற்றத்தை எதிர்கொள்ள 1000 மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம் செம்மணியில் ஆரம்பம்!

நிலை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில், பருவகால மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக 1000 மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம் இன்று யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம் இன்று யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
மரம் ஒன்று வளர்ப்போம் வரும் சந்ததியினருக்கு வளம் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த மரநடுகை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் இ.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், உள்ளிட்ட சமுக அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|