பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி விடுக்கப்பட்டுள்ளது!
Thursday, December 28th, 2017
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்திற்கான புள்ளி வழங்கல் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதபாட வினாத்தாள் தொடர்பில் பல தரப்பிலிருந்தும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. பரீட்சை எழுதிய மாணவர்களும், படிப்பித்த ஆசிரியர்களும் இது எமது பாட அலகுகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்ததாக விசனம் வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் தமக்கு போதியளவு நேரம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் கணிதபாட வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக புள்ளி வழங்கல் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பாட வினாத்தாளில் காணப்பட்ட முரண்பாடுகளை அடுத்து இவ்வாறு புள்ளி வழங்கல் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
|
|
|


