பரீட்சையில் தோல்வி : கிணற்றுக்குள் விழுந்து மாணவி உயிரிழப்பு?

யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சிறுபிட்டி கிழக்கில் 20 வயது மாணவி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவ சோதனையில் தெரிவிக்கப்பட்டுளது.
சுந்தரலிங்கம் அபிநயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சையில் இவர் சித்தியடையாததால் மனமுடைந்து காணப்பட்டார். அதனால் அடுத்த தவணை பரீட்சைக்கு அவரை முயற்சிக்குமாறு பெறறோரால் கூறப்பட்டது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினமிரவு 8 மணியளவில் அவரைக் காணவில்லை என்று தேடியபோது அருகிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து உணர்வற்ற நிலையில் மாணவி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதற்கிடையில் அவர் உயிரிழந்தமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
Related posts:
|
|