பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Friday, August 12th, 2016
யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவந்த காணாமல் போனோர் ஆணைக்குழு தனது இறுதி இடைக்கால அறிக்கையை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதியன்று நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து குறித்த ஆணைக்குழு தனது இறுதி இடைக்கால அறிக்கையை தயாரித்துவந்த நிலையில் இன்று பிற்பகல் அதனை ஜனாதிபதியிடம் சமர்பிக்கவுள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையருக்கு அகதி அந்தஸ்து பறிபோகும் நிலை!
28 ஆம் திகதி க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை!
இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க நட...
|
|
|


