பயணிகள், பண்டங்களுக்கு பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – அதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவிப்பு!
Tuesday, February 28th, 2023
பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகள்., (235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக வரைவிலக்கணம் கூறப்பட்ட, ஏதேனும் துறைமுகத்திலுள்ள உள்ள கப்பலில் இருந்து உணவுகள் மற்றும் பானங்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் போன்றவற்றுள் எந்தவொன்றையும் இறக்குதல், கொண்டு செல்லல், ஏற்றிச் செல்வது, ஏற்றுதல், களஞ்சியப்படுத்தல், விநியோகம் அகற்றுதல்
வீதிகள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரத பாதைகள் உள்ளிட்ட வீதிகள் மூலமான, புகையிரதம் அல்லது விமானம் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல்
ஆகியன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


