ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படும்? – பரணகம

Monday, June 13th, 2016

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி கலைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனோர் குறித்து அலுலகம் ஒன்றையும் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்த அலுவலகத்திடம் முன்வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் விசாரணைகளை நிறைவு செய்ய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு கோரியிருந்தது. எனினும், அதனை எதிர்வரும் மாதத்துடன், கலைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தங்களின் விசாரணை அறிக்கையை காணாமல் போனோர் அலுவலகத்தில் கையளிக்க இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளமையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதி கிடைக்காமல்போய்விடுமோ என மெக்ஸ்வெல் பரணகம கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்களுக்கான நீதி கிடைக்காமல் போவதற்கு அரசியல் காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை பரணகம ஆணைக்குழுவின் மூன்றாவது அறிக்கை கையளிக்கப்படவுள்ளதுடன், குறித்த அறிக்கை ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் படையினர் மீதும் அதிகமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: