பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தடுத்து வைக்கும் இடமாக பிரகடனம்!
Tuesday, June 8th, 2021
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுப்புகாவல் அனுமதியுள்ள காலம் வரையில் கிருலப்பனையில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க வழிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
சார்க் மாநாட்டில் பங்கேற்கிறார் நிதிஅமைச்சர் பாகிஸ்தான் பயணம்!
வறட்சியான காலநிலையால் மின் உற்பத்தி பாதிப்பு!
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது - திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அ...
|
|
|


