பனிப்புலம் வடலியடைப்பு ஊடாகப் புதிய பேருந்து சேவை!
Saturday, October 1st, 2016
பனிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பெருமுயற்சியால் நேற்று வெள்ளிக்கிழமை( 30) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் சாலையின் சத்தியக்காடு, பனிப்புலம், அரசடி, வடலியடைப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கான 782/5 இலக்க விசேட பேருந்து சேவையானது பனிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளரும், காரைநகர் பேருந்து சாலை முகாமையாளரும், கோண்டாவில் பேருந்து சாலை முகாமையாளரும், பல உத்தியோகத்தர்களும் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

Related posts:
குழு மோதல் பற்றி அறிந்த ஓட்டம் பிடித்த பொலிஸார் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!
கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு - வைப்பி...
|
|
|


