பனம் வெல்லத்துக்குப் பெரும் கிராக்கி!

Wednesday, June 6th, 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தால் பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்படும் பனை வெல்லத்துக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டது.

25 கிராம், 50 கிராம், 100 கிராம், 200 கிராம் போன்ற அளவுகளில் தயாரிக்கப்படும் பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு கிலோ பனை வெல்லம் 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளவர்களும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

தென்னிலங்கை வர்த்தகர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பனை வெல்லம் உற்பத்தி செய்யாத பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மொத்த விற்பனை விலையாக ஒரு கிலோ பனம் வெல்லம் 750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்று சங்கப் பொது முகாமையாளர் க.நாகசுபாசன் தெரிவித்தார்.

இதேவேளை பதநீருக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது எனவும் பதநீர் ஒரு போத்தல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts: