பதுளை தீயை கட்டுப்படுத்த பெரு முயற்சி!

பதுளை மாநகரில் இருக்கும் குப்பை மேட்டில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் நேற்றும் நகரம் முழுவதும் கடும் புகை மண்டலம் பரவியதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். விசப்புகையினை சுவாசித்த ஏழு பேர் மயங்கிய நிலையிலும், மூச்சுத் திணறிய நிலையிலும் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதுளைநகரின் 5 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியாஅம்பன்வெல தெரிவித்தார்.இக் குப்பை மேட்டு தீ யைஅணைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காமல் போன நிலையில் ரத்மலானை மற்றும் தியத்தலாவைஆகிய இடங்களில் இருந்து விமானப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயை அணைப்பதற்கான முயற்சிகள் இடம் பெற்றுவருகின்றன. விமானப்படை விசேடஹெலிகெப்டர் மூலம் தீயை அணைக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டது.
பதுளையில் 40 வருடகாலமாக பதுளை வின்சன்ட் விளையாட்டரங்கிற்கருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறன. சுமார் 8 ஏக்கர் பரப்பில் இவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இக்குப்பைக்கு இனந்தெரியாத சிலர் தீமூட்டியதால் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் பதுளை மாநகர பிரதேசம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தீயணைக்கும் நடவடிக்ைகயில் தீயணைப்புப் படையினரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் நேற்று (11)மூன்றாவது நாளாகவும் தீ காரணமாக நகரெங்கும் புகை பரவியிருந்தது. வரட்சியான காலநிலையால் தொடர்ந்து தீ பரவி வருவதாக அறிய வருகிறது. இதனால் இப்பகுதிஆரம்பப் பாடசாலைகள் மற்றும் உயர்நிலை பாடசாலைகள் அனைத்தையும் மூடிவிடுமாறும்,நகரவாசிகளை முகக்கவசங்களை அணிந்து வீதியில் நடக்குமாறும் பதுளை மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இக்குப்பைக் கூளங்களில் பிளாஸ்டிக் வகைகளும்,பொலித்தீன் வகைகளும் கிடப்பதால் அவைகளினால் ஏற்பட்டிருக்கும் புகை சுகாதாரத்திற்கு கேடுவிளைவிப்பதாக உள்ளது.இதனால் சுகாதாரத்தைப் பேணுமாறும் பதுளை மாவட்டசுகாதார சேவையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து ஊவாமாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க , நிலைமையை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
விமானப்படை ஹெலிகப்டரினூடாக குப்பை மேட்டிற்கு வானிலிருந்து நீர் வீசப்பட்டது.தரை வழியாக படையினர் தீயை கட்டுப்படுத்த தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறகிறது.
Related posts:
|
|