பதவி விலகினார் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் – கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

கடந்த 2019 டிசம்பர்முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துவந்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன், இன்றுமுதல் தமது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகவும் பேராசிரியர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்..
அதற்கமைய, இன்று தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறவுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாளையதினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். காரைநகர்க் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு 19 வரை விளக்கமறியல்!
அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் – நீதி அமைச்சு!
தபால் மூல வாக்களிப்பிற்கான 40,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு - தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|