பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்திலேயே செலுத்துவதற்கு தீர்மானம் – அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, January 17th, 2023

பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்திலேயே செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை குறித்த சில தினங்களுக்குப் பின்னர் செலுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகளை அமுலாக்கம் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் வருமானம் திரட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதால், அரச நிதிப்பாய்ச்சல் வரையறைகளுக்குப் பொருத்தமான வகையில் ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒரு சில மாதங்கள் அரச செலவினங்களை முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளது.

அதன்படி திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பிரச்சினைகளை தீர்ப்பதல்ல பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு - அமைச்சர் ட...
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை – விசேட குழு ஒன்றும் விரைவி...
அபிவிருத்தி திட்டங்களுக்கு சுற்றறிக்கைகள் இடையூறாக இருக்குமாயின் சுற்றறிக்கைகளை உடனடியாக திருத்துங்க...