பண்ணைப் பாலத்தின் இரு மருங்கும் மரங்களை நாட்ட வேண்டும்! – மக்கள்

யாழ். பண்ணைப் பாலத்திலிருந்து தீவுக்கான இருபது கிலோமீற்றர் வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டுமாறு தீவக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த வீதியில் இரு மருங்கிலும் மரங்கள் இல்லாத நிலையில் வீதி காணப்படுவதாகவும் மருதமரம், புளியமரக் கன்றுகளை நாட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் இம்மர நடுகை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்தில் அதன் சூழலுக்கேற்ற விதத்தில் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் கூடுதலாக நடுகை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Related posts:
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் நடவடிக்கை - பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!
ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியது இலங்கை!
வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. ச...
|
|