பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட மாட்டோம் – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்!

மக்களின் உயிர்களை காவு கொள்ளும் சட்டத்தைக் கொண்டுவர ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தயாரில்லையென அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தண்டப் பத்திரத்திலுள்ள 33 வகையான தண்டப்பண அறவீடுகளை நீக்குவதற்கு தமது சங்கம் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினால் முடியுமாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த 25,000 ரூபா தண்டப்பண அறவீட்டுப் பத்திரத்தில் 6 வகையான குற்றங்கள் மக்களுடைய உயிர்களுக்கு அச்சுறுத்தலானவை. இவற்றை நீக்குமாறு கோருவதற்கு, பொறுப்புள்ள அமைப்பு என்ற வகையில் எம்மால் முடியாது எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் கூறியுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி நாட்டிலுள்ள பஸ் சங்கங்கள் பலவும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
Related posts:
|
|