பணியாளர்களுக்கான புதிய வீட்டுத் தொகுதிகள்!
Tuesday, July 19th, 2016
கொழும்பு கெப்பிட்டிக்கொல்லாவ மாவத்தையில் அமைந்துள்ள ‘சமீட்’ வீட்டுத்தொகுதிக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய குடியிருப்புத் தொகுதிகளானது அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றபவர்களுக்கு வாடகைக்கு விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அரச மற்றும் தனியார் சேவை தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
புகையிரதம் மோதி ஒருவர் பலி!
வேலையற்ற பட்டதாரிகளின் விண்ணப்ப வயதில்லை அதிகரிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
இரயில்வே திணைக்களத்தில் தற்போது 150 ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தகவல்!
|
|
|


