நேபாள ஜனாதிபதி இலங்கை வருகை!

Saturday, May 13th, 2017

ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரியும் நேற்று (12) மாலை இலங்கை வந்தடைந்தார்

ஐக்கிய நாடுகள் வெசாக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 2 தடவைகளுமாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதற் தடவையாகும். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான லக்ஷமன் கதிர்காமர் பௌத்த மதத்தில் இலங்கைக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்து ஐநாவில் வலியுறுத்தினார்.

இதற்கமைவாக 2001 ஆம் ஆண்டு பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தை இலங்கையில் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கடந்தகால சூழ்நிலைகள் சாதகமாக அமையாத பட்சத்தில் தற்போது இந்நிகழ்வு இலங்கையில் நடைப்பெறுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச உயர் மட்டத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 75 உலக நாடுகளின் பிரதிநிதிகள் வெசக் தின நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: